×

கச்சூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை: கணக்கில் வராத ரூ. 25 ஆயிரம் பறிமுதல்

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த கச்சூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விதைத்து அறுவடை செய்த நெல் மூட்டைகளை கொண்டு வருவார்கள். அவ்வாறு, அவர்கள் கொண்டு வரும் நெல் மூட்டைகளுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக நெல் மூட்டைக்கு ரூ. 40 வசூலிக்கப்படுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  

இதனையடுத்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சென்னை பிரிவு 2 காவல் துணை கண்காணிப்பாளர் லவக்குமார் தலைமையில் திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் ஆய்வுக்குழு அலுவலர்கள் 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில், கணக்கில் வராத 25 ஆயிரத்து 880 ரூபாய் பறிமுதல் செய்தனர். இது குறித்து நேரடி கொள்முதல் நிலையத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த சுந்தராஜன், நரேஷ் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kakur ,Live Paddy ,Purchasing Centre , Kachur, Paddy Procurement Station, Anti-Corruption, Surveillance Department Officers, Check
× RELATED பொன்னை கொள்முதல் நிலையத்தில் 1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீண்